கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி..!! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் குடித்து 57 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம்  மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்

இதுகுறித்து பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது,  "கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்திற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். தமிழக முதல்வரோ, அலலது சம்மந்தப் பட்ட துறை அமைச்சரோ இதுவரை பாதிக்கப்பட்ட மக்களை நேரில்  சென்று சந்திக்கவில்லை. 

ஆனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளரை இடைநீக்கம் செய்வது, மாவட்ட ஆட்சியரை மாற்றுவது என்று திமுக அரசு இந்த பிரச்சினையை திசை திருப்ப முயற்சிக்கிறது. இதை செய்வதால் மட்டுமே இந்த விவகாரம் முடிந்து விடாது. 

சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஒத்துக் கொள்ளாமல் இருப்பது எங்களுக்கு சந்தேகத்தை வரவழைக்கிறது. ஆளும் கட்சியினரின் குட்டு அம்பலப்பட்டு விடும் என்று திமுக பயப்படுகிறது. 

தமிழக அரசின் சிபிசிஐடி விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லாததால் தான், சிபிஐ விசாரணை கோருகிறோம். இதுகுறித்து போராட்டம் நடத்திய பாஜகவினரை போலீசார் நடத்திய விதம் கண்டனத்திற்குரியது. ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்துவது என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. ஆனால் தமிழக காவல் துறை போராட்டம் நடத்திய பாஜகவினரை குற்றவாளிகள் போல் நடத்தியுள்ளது" என்று பேசியுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN BJP Leader Thamilisai Soundarrajan Gives Interview on Kallakurichi Hooch Tragedy


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->