மதெவறியை மாய்த்து மனிதநேயம் காப்போம் - வீடியோ வெளியிட்ட CM மு.க.ஸ்டாலின்!
TN Chief Minister MK Stalin
பழங்குடியினருக்கான 1000 குடியிருப்புகளை திறந்து வைத்தது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் வீடியோ ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில். "கல்வி எனும் பேராயுதத்தைத் துணைக்கொள்ளச் சென்னை நோக்கி வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களை ஏந்திக்கொள்ளும் பெருந்தலைவர் எம்.சி.ராஜா பெயரிலான சீரமைக்கப்பட்ட விடுதிக் கட்டடத்தைத் திறந்து வைத்தேன்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களையும் நிதிகளையும் வழங்கி, தொழில் முனைவோர்களை உருவாக்கி, மாணவர்களை உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி, வன்கொடுமைகளைக் குறைத்து, சமத்துவத்தை நிலைநாட்டும் பொற்கால ஆட்சியாக இருக்கும் நமது திராவிட மாடல் அரசின் சமத்துவ நாள் விழாவில் பழங்குடியினருக்கான 1000 குடியிருப்புகளைத் திறந்து வைத்து, 49,542 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினேன்.
மதவெறியை மாய்த்து மனிதநேயம் காப்போம்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
TN Chief Minister MK Stalin