ஒன்றிய அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதிய தமிழக முதலமைச்சர் !
TN CM M K Stalin Wrote A Letter To Cabinet Minister S Jai Sankar
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரான டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு நேற்று ( ஜூன் 19 ம் தேதி ) கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டு இருக்கும் சாராம்சமானது பின்வருமாறு அறியப் படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து விசைப் படகில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று முன்தினம் ( ஜூன் 18) அன்று கைது செய்துள்ளது. மேலும் தமிழக மீனவர்களின் விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை கைப்பற்றி உள்ளது.
இலங்கை கடற்படையினரால் நடத்தப்படும் இந்த கைது சம்பவங்கள் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் சீரழித்து விடுவதாக இருக்கிறது. மேலும் இந்த கைது சம்பவங்கள் மீனவர்களிடையே பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன.
மேலும் தற்போது இலங்கை அரசிடம் தமிழக மீனவர்கள் 15 பேர் மட்டும் அல்லாது 162 மீன்பிடி படகுகளும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. எனவே இலங்கை கடற் படையினரால் கைது செய்யப் பட்டுள்ள 15 தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் இலங்கை அரசிடம் இருந்து மீட்டுத் தர ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் மூலம் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.
English Summary
TN CM M K Stalin Wrote A Letter To Cabinet Minister S Jai Sankar