தமிழக மீனவர்கள் கைது விவகாரம் : மீண்டும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்..! - Seithipunal
Seithipunal


தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற் படையினரால் கைது செய்யப் படுவதும், தாக்கப் படுவதும், படகுகளை இலங்கை கடற் படையினர் பறிமுதல் செய்து கொண்டு செல்வதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இரண்டாவது முறையாக மீண்டும் கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் குறிப்பிட்டிருப்பதாவது, "திங்கட் கிழமையான நேற்று (ஜூன் 24) IND-TN-12-MM-5138 என்ற பதிவு எண் கொண்ட விசைப் படகில் வங்கக் கடலில் மீன் பிடிக்கச் சென்ற நாகப்பட்டினத்தை சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற் படையினர் கைது செய்துள்ளனர்.

இதனிடையே இந்த 2024ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து இதுவரை 203 தமிழக மீனவர்கள் இலங்கை கடற் படையினரால் கைது செய்யப் பட்டுள்ளனர். மேலும் 27 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை கடற்படையினரின் தொடரும் இந்த அத்துமீறல் நிகழ்வால் தமிழக மீனவர்களிடையே ஒரு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.

எனவே மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு மீனவர்கள் கைது செய்யப் படுவதை தடுக்கவும், இலங்கை வசமுள்ள 47 மீனவர்களையும், 166 மீன்பிடி விசைப் படகுகளையும் விடுவிக்க கோரியும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கூட்டுப் பணிக்குழு கூட்டத்தை விரைந்து கூட்ட வேண்டும்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN CM M K Stalin Wrote Letter to Union External Affair Minister Jaishankar On Fishermen Issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->