தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அடுத்த தலைவர் இவரா? வெளியான பரபரப்பு தகவல்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து வரும் கே.எஸ் அழகிரியின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளதால் அடுத்த காங்கிரஸ் கமிட்டி தலைவர் யார் என்ற கேள்வி கடந்த சில மாதங்களாகவே எழுந்து வருகிறது. 

காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பெண் ஒருவரை நியமனம் செய்யப்படலாம் என பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் அதற்கான ஆலோசனைக் கூட்டமும் டெல்லியில் நடைபெற்றது.

கடந்த ஜூன் மாதம் டெல்லியில் கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு "கையோடு கைகோருங்கள்" நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி செய்தியாளர்கள் சந்திப்பில் "அனைத்து பொறுப்புகளும் மாற்றத்திற்குரியது தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை மாற்றினால் ஏற்றுக் கொள்வோம்" என பேசி இருந்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் குறித்தான அறிவிப்பு என்று வெளியாகலாம் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக செல்வப்பெருந்தகையும், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவனு நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN congress committee new president is likely to be announced today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->