#வாக்குச்சாவடி முகவர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி முகவர்கள் மத்திய மாநில அரசுகள் தங்களுக்கு வழங்கிய அடையாள அட்டையை உடன் வைத்திருக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக, பல்வேறு உத்தரவுகளையும், கட்டுப்பாடுகளையும் மாநில தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தி வருகிறது.

அதன் ஒருபகுதியாக மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள புதிய உத்தரவில், மத்திய, மாநில அரசுகள் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வாக்குச்சாவடி முகவர்கள் தேர்தல் பணியின் போது தங்களுடன் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் முகவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் புகைப்படம் இருக்காது.

இதனால் தேர்தல் பணியின் போது, பணியில் இருக்கும் வாக்குச்சாவடி முகவர்கள் மத்திய, மாநில அரசுகள் தங்களுக்கு வழங்கியுள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் எனவும், அப்படி புகைப்படத்துடன் கூடிய அரசு அடையாள அட்டையை வைத்திருந்தால் மட்டுமே காவல்துறையினர் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், வாக்குச்சாவடி முகவர்களை வாக்குச்சாவடி மையத்திற்குள் அனுமதிப்பார்கள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Election Commission Order For Booth Agents


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->