தமிழக ஆளுநர் ஆர். என். ரவி "திடீர்" டெல்லி விசிட்.. இது தான் காரணமா...? - Seithipunal
Seithipunal


தமிழக ஆளுநர் ஆர். என். ரவி இன்று திடீரென விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் மற்றும் பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து ஆளுநர் டெல்லியில் ரிப்போர்ட் அளிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

கள்ளகுறிச்சி விஷ சாராய சம்பவத்தில் பலர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதன் பரபரப்பு அடங்கும் முன்னரே மாநிலத் தலைநகரான சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப் பட்டுள்ளார். 

அதுவும் ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டிற்கு அருகிலேயே வெட்டிக் கொலை செய்யப் பட்டுள்ளது தேசிய அளவில் தலித் அமைப்புகள் இடையே கடும் எதிர்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் இந்த படுகொலை சம்பவத்திற்கு கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக மாற்றப்பட்டு, புதிய காவல் ஆணையராக அருண் நியமிக்கப் பட்டுள்ளார். 

இதற்கிடையே தான் ஆளுநரின் 'திடீர்' டெல்லி பயணம் அமைந்துள்ளது. 5 நாள் பயணமாக டெல்லி செல்லும் ஆளுநர் ரவி, அங்கு பல்வேறு சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. அதே நேரம் இது ஆளுநரின் தனிப்பட்ட பயணம் என்றும் கூறப்படுகிறது. 

கோவில்கள் மற்றும் அவரது குடும்ப நிகழ்வுகளில் ஆளுநர் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் தமிழகத்தின் தற்போதைய சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து டெல்லியில் ஆளுநர் புகார் அளிக்கலாம் என்றும் கருதப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Governor R N Ravi Makes Sudden Trip To Delhi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->