அந்தர் பல்டி அடித்ததா தமிழக அரசு.? ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு ஓகே.. அந்த ஒன்னு தான் பிரச்சனையாம்.!
tn govt give permission to rss rally
சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் 6 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணியை நடத்த அனுமதி அளித்துள்ளது குறித்து தமிழக அரசு தங்களுக்கு அக்டோபர் 2ம் தேதி பேரணி நடத்துவதில் மட்டும் தான் சம்மதமில்லை என்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் 2ம் தேதி 51 இடங்களில் பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் இயக்கம் அனுமதி கேட்டு தமிழக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபியிடம் மனு அளித்திருந்தனர். அந்த மனுவின் மீது அவர்கள் பரிசீலனை செய்யாத காரணத்தால் உயர்நீதிமன்றத்தை நாடினர்.
உயர்நீதிமன்றம் சில விதிமுறைகளை வழங்கி பேரணி நடத்த அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது. தற்போது, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளின் வீடு மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டுகள் வீசப்படுகின்றன.
சட்ட ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், தமிழக காவல்துறை பல்வேறு சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை காரணம் காட்டி எந்த இடத்திலும் ஊர்வலம், பேரணி, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லை. இதனால் அக்டோபர் 2ம் தேதி நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் 6 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணியை நடத்த அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி பேரணி நடத்துவதில் மட்டும் தான் தங்களுக்கு சம்மதமில்லை என்றும், மற்ற தேதிகளில் நடத்த சம்மதம் என்றும் தெரிவித்துள்ளது.
English Summary
tn govt give permission to rss rally