'மருத்துவ நிபுணர் எடப்பாடி பழனிச்சாமி..' சட்டசபையில் அமைச்சர் மா. சுப்பிரமணியம் தடாலடி பதில்..!
TN Minister Ma Subramaniam Replying For EPs in Assembly
தற்போது தமிழகத்தில் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத் தொடரில் கலந்து கொள்ள வந்த அதிமுகவினர் கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தொடர்ந்து தினமும் கருப்பு நிற சட்டை அணிந்து சட்டமன்றத்திற்கு வருகின்றனர்.
இந்நிலையில் கள்ளகுறிச்சி விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் பேச சபாநாயகரிடம் அதிமுகவினர் அனுமதி கேட்டனர். ஆனால் கேள்வி - பதில் நேரத்திற்கு பிறகே இந்த விவகாரம் குறித்து பேச அனுமதிக்க முடியும் என்று சபாநாயகர் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து அதிமுகவினர் சட்டசபை நிகழ்வுகளை புறக்கணித்தனர்.
மேலும் செய்தியாளர்களிம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, " நான் ஏற்கனவே விஷ சாராய முறிவுக்கான மருந்து தட்டுப்பாடு உள்ளதாக கூறினேன். ஆனால் அமைச்சர் மா. சுப்ரமணியன் அல்சர் மருந்தின் பெயரை கூறி அது கையிருப்பில் தான் உள்ளது என்று மருந்தின் பெயரையே மாற்றி சொல்கிறார்" என்று குற்றம் சாட்டி இருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலளித்த அமைச்சர் மா. சுப்ரமணியன், " முதலில் ஓம்பிரசோல் என்ற பெயருள்ள மருந்து கையிருப்பில் இல்லை என்று தான் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.இந்நிலையில் இன்று ஃபோம்பிசோல் மருந்து கையிருப்பில் இல்லை என்று கூறுகிறார்.
விஷ சாராய முறிவுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும், மருந்துகளும் அளவுக்கதிகமாகவே கையிருப்பில் உள்ளன. இந்நிலையில் மருத்துவ நிபுணர் எடப்பாடி பழனிச்சாமி ஏதேனும் புதிய சிகிச்சை முறையை கண்டுபிடித்து கூறினாலும் அது மக்களின் உயிரை காப்பாற்றும் எனில் எடப்பாடி கூறும் சிகிச்சை முறை பின்பற்றப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
TN Minister Ma Subramaniam Replying For EPs in Assembly