மது குறித்து நையாண்டிக் கருத்து தெரிவித்த அமைச்சர் துரை முருகன்.. கண்டனம் தெரிவிக்கும் தலைவர்கள்..!! - Seithipunal
Seithipunal


நேற்று சட்டசபையில் பேசிய அமைச்சர் துரை முருகன் உழைப்பவர்கள் தங்களின் உடல் அசதியைப் போக்கவே மதுவை நாடுகின்றனர். ஆனால் டாஸ்மாக்கில் கிடைக்கும் சரக்கில் கிக் இல்லை. அதனால் தான் கள்ளச் சாராயத்தை தேடி போகின்றனர் என்று பேசியிருந்தார். 

அதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி தெரிவிக்கையில், "தமிழக அமைச்சர்களின் மது குறித்த கருத்துக்கள் அவர்களின் இயலாமையையும், தமிழக அரசின் தோல்வியையும் தான் காட்டுகின்றன. மதுவிலக்கு சாத்தியமில்லை என்று கூறும் இந்த அரசு எதற்கு ஆட்சியில் இருக்கிறது?" என்று கேட்டுள்ளார்.

மேலும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா , "முதல்வரை வைத்துக் கொண்டே டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை என்று ஒரு மூத்த அமைச்சர் சட்ட சபையிலே பேசுகிறார். அரசு நடத்தும் டாஸ்மாக் கடையில் தரமில்லை என்று அமைச்சரே ஒத்துக் கொள்கிறாரா? அமைச்சரின் இந்த கருத்தை தேமுதிக கண்டிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

தாமகா தலைவர் ஜி. கே. வாசன் மற்றும் அமமுக டிடிவி தினகரன் ஆகியோர் தெரிவிக்கையில், "நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தே மதுவிலக்கு தான் என்று அறிவித்தவர்கள் தான் இப்போது மதுவிலக்கு சாத்தியமற்ற ஒன்று என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். துரை முருகனின் இந்த கருத்து அவர் வகிக்கும் பதவிக்கு ஏற்றதல்ல என்பதை அவர் உணரவில்லை" என்று தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Political Leaders Condemns Minister Durai Murugan Speech About TASMAC Liquors


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->