காவிரிக்காக அண்ணாமலை அறிவித்திருந்த போராட்டம் திடீர் ரத்து!! காரணம் தான் அங்க ஹைலைட்டே!! - Seithipunal
Seithipunal


கர்நாடக அணிகளில் இருந்து தமிழகத்திற்கு சேர வேண்டிய பங்கு நீரை திறந்து விடாத கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்த நிலையில் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக பாஜக பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் "வரும் 16ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் மிகப்பெரிய அளவில் கும்பகோணத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தோம். 

தற்போது கர்நாடக அணைகளில் இருந்து படிப்படியாக நீர் திறப்பு குறைக்கப்பட்ட தற்போது 3000 கன அடி நீர் திறக்கப்படுவதால் இந்த நேரத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது சரியாக இருக்காது என மாநில தலைவர் அண்ணாமலை கூறியதன் அடிப்படையில் அவர் உண்ணாவிரத போராட்டத்தை ஒத்தி வையுங்கள் என சொன்னதன் காரணத்தினால் தற்காலிகமாக இந்த போராட்டமானது ஒத்திவைக்கப்படுகிறது. காவிரியில் இருந்து கர்நாடக அரசு உரிய நீர் திறக்காவிட்டால் தமிழக பாஜக மிகப்பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுக்கும்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNBJP president Annamalai hunger protest for Cauvery water cancelled


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->