காலாவதியான பேருந்துகளுக்கு பதிலாக 1771 பேருந்துகள் வாங்க தமிழக அரசு முடிவு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் BS IV ரக பேருந்துகள் 1771 வாங்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 40% காலாவதியான பேருந்துகள் இயக்கப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில், போக்குவரத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு- 402 பேருந்துகளும், விழுப்புரம் போக்குவரத்து கழகத்திற்கு 347 பேருந்துகளும், சேலம் போக்குவரத்து கழகத்திற்கு 303 பேருந்துகளும், கோவை போக்குவரத்து கழகத்திற்கு 115 பேருந்துகளும், கும்பகோணம் போக்குவரத்து கழகத்திற்கு 303 பேருந்துகளும், மதுரை போக்குவரத்து கழகத்திற்கு 251 பேருந்துகளும் பிரித்து வழங்கப்பட உள்ளன.


மேலும் ஒரு அண்மைய செய்தி : தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது சொந்த கட்சியினரை பார்த்து பயம் கொள்வதாக, அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

மேலும், அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்று தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி, வருகின்ற மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGOvt new Bus 1771


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->