காங்கிரஸ் கட்சியில் இருந்து மேலும் 64 தலைவர்கள் ராஜினாமா! - Seithipunal
Seithipunal


ஜம்மு-காஷ்மீா் காங்கிரஸில் இருந்து மேலும் 64 தலைவர்கள் ராஜிநாமா செய்வதாக காங்கிரஸ் தலைமைக்கு கடிதங்களை அனுப்பியுள்ளனர். மேலும், அவர்கள் குலாம் நபி ஆசாதுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா்.

காங்கிரஸ் கட்சியில் சுமாா் 50 ஆண்டுகாலமாக இருந்து வந்த குலாம் நபி ஆசாத் அண்மையில் கட்சியில் இருந்து விலகினாா். இதனைத் தொடர்ந்து, விரைவில் பிராந்திய அளவில் புதிய கட்சியைத் தொடங்க இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அவருக்கு ஆதரவாக ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த காங்கிரஸ் தலைவா்கள் விலகி வருகின்றனா். காங்கிரஸ் சாா்பில் ஜம்மு-காஷ்மீரில் துணை முதலமைச்சராக இருந்த தாரா சிங், முன்னாள் அமைச்சா்கள் மற்றும் காங்கிரஸ் நிா்வாகிகள் நேற்று அக்கட்சியிலிருந்து விலகினர்.

இதனை தொடர்ந்து, இன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து மேலும் 64 தலைவர்கள் ராஜிநாமா செய்வதாக கடிதம் அனுப்பியுள்ளனர். ஜம்மு-காஷ்மீா் காங்கிரஸ் பொதுச் செயலா் மகேஷ்வா் சிங் மனாஸ் மற்றும் ஜம்மு-காஷ்மீா் பேரவையின் துணைத் தலைவராக இருந்த குலாம் ஹைதா் மாலிக் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர்.

இவர்களை தொடர்ந்து, முன்னாள் எம்எல்சிக்கள் சுபாஷ் குப்தா மற்றும் ஷா லால் பகத் ஆகியோரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி குலாம் நபி ஆசாதுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா். இது தொடர்பாக அவர்கள் காங்கிரஸ் தலைமைக்கு தனித்தனியாக கடிதங்களை அனுப்பியுள்ளனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today 64 leaders resigned Congress party


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->