நானே ரயிலை மறித்து போராட்டம் செய்வேன் - மக்களவையில் மாணிக்கம் தாகூர் அறைகூவல்.! - Seithipunal
Seithipunal


சிவகாசியில் கொல்லம் ரயில் நின்று செல்லவில்லை என்றால், ரயில் மறியலில் ஈடுபட போவதாக பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவையில் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

மேலும், இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,

"சென்னை எழும்பூர்-கொல்லம் விரைவு ரயிலானது மோடி அரசு அமைந்த பிறகு சிவகாசியில் நிற்பதில்லை. சிவகாசியில் கொல்லம் ரயில் நிறுத்த வேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதம் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து கோரிக்கை வைத்தேன். 

இதற்கு முன்னதாக கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 21-ஆம் தேதி சிவகாசியில் கொல்லம் ரயில் நிறுத்த வேண்டும் என்று அப்போதைய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து கோரிக்கை வைத்தேன்.

இந்த கோரிக்கையை இன்று மக்களவையில் வைக்கின்றேன். சிவகாசியில் கொல்லம் ரயில் நிறுத்தி செல்லவில்லை என்றால், வருகின்ற செப்டம்பர் 22-ஆம் தேதி சிவகாசியில் நானே முன்னின்று ரயில் மறியலில் ஈடுபடுவேன். வேறு வழியில்லை". என்று அவர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

train protest Manikam Tagore say Lok Sabha


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->