"தமிழக போக்குவரத்து பேருந்துகள் அதிமுக ஆட்சியில் தான் நாசம் ஆனது" - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் !! - Seithipunal
Seithipunal


தமிழக போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,116 பேருந்துகளில் 10,020 பேருந்துகள் பழுதடைந்தும்  காலாவதி ஆனவையும் எனக் கண்டறிந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், இ-பஸ்கள், தாழ்தளப் பெட்டிகள், புதுப்பிக்கப்பட்ட மற்றும் மாற்றியமைக்கப்பட்ட பேருந்துகள் உள்ளிட்டவற்றை கொஞ்சம் கொஞ்சமாக போக்குவரத்து துறையில் இணைக்க வழிவகை செய்யப்படும் என்றார். 

மேலும் இந்த பேருந்துகள் LNG மற்றும் CNG எரிபொருள் தொழில்நுட்பத்தில் ஓடுகிறது. இந்த பேருந்து அனைத்தும் ஒரு வருடத்திற்குள் செயல்படுத்தப்படும் எனவும் நவீனமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக செய்யப்படும் என்று அமைச்சர் உறுதியளித்ததாக தெரியவந்துள்ளது.

முந்தய அதிமுக அரசு போதிய எண்ணிக்கையிலான புதிய பேருந்துகளை வாங்கத் தவறிவிட்டனர் என தற்போதைய பல பேருந்துகளின் நிலைக்கு முந்தைய அதிமுக அரசைக் குற்றம் அமைச்சர் சாட்டினார்.

கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டு கால திமுக ஆட்சியில், தமிழக போக்குவரத்துக் கழகங்களுக்கு 15,005 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டன. மொத்தம் 14,489 பேருந்துகள், ஆனால் 2011ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மொத்தம் 14,489 பேருந்துகள் மட்டுமே கொண்டு வரப்பட்டன என்று சிவசங்கர் கூறினார்.

 ஜெர்மனியைச் சேர்ந்த KfW வங்கியின் நிதியுதவியுடன் 2,166 பேருந்துகள் மற்றும் 500 இ-பேருந்துகள் மற்றும் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேலும் 16 பேருந்துகள் வாங்கப்பட்ட உள்ளன.

இது தவிர மேலும் , போதுமான வசதியுள்ள 1500 பழைய பேருந்துகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்போது திமுக அரசு 7,682 புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை அமைச்சர் குறிப்பிட்டார்.

 முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுமூகமான பயணத்தை எளிதாக்கும் வகையில் முதல் கட்டமாக 552 தாழ்தளப் பேருந்துகள் வாங்கப்படவுள்ளன. இந்த தாழ்தளப் பேருந்துகளில் பெரும்பாலானவை சென்னையில் அறிமுகப்படுத்தப்படும், மீதமுள்ளவை கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி போன்ற நகரங்களில் பயன்படுத்தப்படும். 

மேலும், 7,682 புதிய பேருந்துகளில், 832 பேருந்துகள் கடந்த மே மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி சாலைக்கு வந்துவிட்டன. மேலும், புதுப்பிக்கப்பட்டு வரும் 1,500 பேருந்துகளில், 860 பேருந்துகள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது என தகவல் கிடைத்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

transport busses ruined under admk rule said sivasankar


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->