கூட்டணியில் இருந்து "விலகினால் பின்னடை இல்லை".!! - இறங்கி அடிக்கும் திமுக தரப்பு.!!
Trbaalu said Nitish Kumar withdraw alliance not setback
எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு குறித்தான பேச்சு வார்த்தை இன்று சென்னை அறிவாலயத்தில் நடைபெற்றது.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு தலைமையிலான திமுக தொகுதி பங்கீடு குழுவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையிலான குழுவும் இன்று பேச்சு வார்த்தை நடத்தியது.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி திமுகவுடன் பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாகவும், தொகுதிகள் கேட்டு எந்த பட்டியலையும் திமுகவிடம் வழங்கவில்லை எனவும் விளக்கம் அளித்து இருந்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தொகுதி பங்கீட்டு குழு தலைவர் டி.ஆர் பாலு கூறுகையில் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என உதயநிதி கேட்டதில் தவறில்லை.
உதயநிதி கேட்டது போல் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது பற்றி முதல்வரிடம் எடுத்துரைப்பேன். நிதீஷ் குமார் விலகியதால் இந்தியா கூட்டணியில் எந்த பின்னடைவும் இல்லை. காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது.
காங்கிரஸ் தரப்பு தங்கள் கோரிக்கைகளையும் நிபந்தனைகளையும் தெரிவித்துள்ளனர். 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக நிற்க வேண்டும் என நான் விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சியுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வரும் பிப்ரவரி 9ம் தேதிக்கு பிறகு நடைபெறும்" என தெரிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் பெரியசாமி திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளன என அழுத்தமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Trbaalu said Nitish Kumar withdraw alliance not setback