#Breaking | திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டிடிவி தினகரன்.!
Ttv dhinakaran admitted in thanjai Hospital
அமமுக டிடிவி தினகரன் தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு நேற்று இரவு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் தஞ்சையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் இரவு சாப்பிட்ட உணவு அவருக்கு ஒவ்வாமை (Food Poison) ஏற்படுத்தியதாகவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தஞ்சையில் டிடிவி தினகரன் முகாமிட்டிருந்த போது இந்த உடல்நலக்குறைவு ஏற்ப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அவருக்கு இரவு சாப்பிட்ட உணவினால் ஒவ்வாமை ஏற்பட்டு தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்றே அவர் வீடு திரும்புவார் என்றும் வெளியான தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Ttv dhinakaran admitted in thanjai Hospital