தமிழக வீரர் சாலை விபத்தில் மரணம் - அதிர்ச்சியில் டிடிவி தினகரன்.!
ttv dhinakaran mourning to deena thayalan dead
தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்கள் வென்றுள்ள விஸ்வா தீனதயாளன் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் மறைவுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவரின் அந்த இரங்கல் செய்தியில்,
"தமிழகத்தைச் சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் சாலை விபத்தில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியும் துயரமும் அளிக்கிறது.
தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்கள் வென்றுள்ள விஸ்வா, எதிர்காலத்தில் சாதனைகளைச் செய்திடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படி மரணம் நேரிட்டிருப்பது வேதனை தருகிறது.
அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
English Summary
ttv dhinakaran mourning to deena thayalan dead