திமுகவின் ஆட்சி 23-ம் புலிகேசி ஆட்சியாக நடந்து கொண்டிருக்கிறது - டிடிவி தினகரன் விமர்சனம்.! - Seithipunal
Seithipunal


இன்று அமமுக பிரமுகர் இல்ல திருமண விழா தருமபுரியில் நடந்தது. இதில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டபின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், 

"10 மாத கால திமுக ஆட்சியில் மக்கள் அவதி படுகின்றனர். திமுக தலைவர் முக ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது என்ன குற்றம்சாட்டினாரோ? தற்போது அவரது ஆட்சியிலும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார். 

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றவில்லை.இந்த ஆட்சி தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணம் குறித்த உண்மை தானாகவே வெளவரும். 

தற்போது இந்த திமுக ஆட்சி 23-ம் புலிகேசி ஆட்சியாக நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக நீட் தேர்வு பிரச்சினைக்கு 23-ம் புலிகேசியின் நிலையில் தான் உள்ளது. ஆட்சியில் சொல்வது ஒன்றும், செய்வது ஒன்றுமாக உள்ளது. 

திமுகவை நம்பி வாக்களித்த மக்களுக்கு, தண்டனையை திமுக திருப்பி வழங்கியுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் எங்களுக்கு வெற்றியை மக்கள் தேடி தருவார்கள்" என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran Say About 10th Month of DMK Govt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->