ஓபிஎஸ் - சபரீசன் சந்திப்பு பின்னணி! புட்டுபுட்டு வைத்த டிடிவி தினகரன்!
TTV Dhinakaran say about OPS Sabs Meet
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம், நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தமிழகம் முதல்வர் மு க ஸ்டாலினின் மருமகன் சபரீசன் உடன் சந்தித்து பேசியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.
ஏற்கனவே திமுகவின் கைக்கூலியாக ஓ பன்னீர்செல்வம் செயல்பட்டு வருவதாக எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் விமர்சனம் செய்து வரும் நிலையில், இந்த சந்திப்பை அதிமுக ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஓ பன்னீர்செல்வம் - சபரீசன் சந்திப்பு இயல்பானது தான் என்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனிடம், ஓ பன்னீர்செல்வம்-சபரீசன் சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த டிடிவி தினகரன், ஓபிஎஸ்-சபரீசன் சந்திப்பு இயல்பானது தான். ஆட்டத்தை காணும்போது சந்தித்துள்ளனர்.
இதில் வேறு உள்நோக்கம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், எடப்பாடி பழனிச்சாமி திமுக இடையே ரகசிய ஒப்பந்தம் இருப்பதால் தான், கொடநாடு வழக்கு காலதாமதம் ஆவதாக மக்கள் கூறுகின்றனர் என்பதை இந்த இடத்தில் பதிவு செய்கிறேன்" என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
English Summary
TTV Dhinakaran say about OPS Sabs Meet