மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கின் சகோதரர் தேவேந்தர் சிங் ராணா மரணம் - Seithipunal
Seithipunal


பரிதாபாத், அரியானா: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கின் சகோதரரும் நக்ரோடா சட்டமன்ற உறுப்பினருமான தேவேந்தர் சிங் ராணா இன்று அரியானா மாநிலம் பரிதாபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 59. கடந்த சில காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ராணா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதனால், அவருடைய மரணம் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது. 

1965-ம் ஆண்டு ஜம்முவின் தோடா மாவட்டத்தில் டோக்ரா குடும்பத்தில் பிறந்த தேவேந்தர் சிங் ராணா, சிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர். ஆட்டோமொபைல் துறையில் "ஐம்காஷ் வெஹிகிலேட்ஸ்" குழுமத்தை உருவாக்கி, தொழில்முனைவோராக நன்மதிப்பை பெற்றவர். பின்னர், கேபிள் டிவி சேனல் தொடங்கி, தொழில் நுட்பத் துறையிலும் தன்னை நிலைநிறுத்தினார்.

தேவேந்தர் ராணா தனது அரசியல் பயணத்தை தேசிய மாநாடு கட்சியில் (NC) தொடங்கினார். ஜம்முவில் உமர் அப்துல்லாவின் நம்பிக்கைஉறுதியாக, கட்சியின் முக்கிய வியூகங்களை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றினார். 2021-ல் பாஜகவில் இணைந்த பிறகு, ஜம்முவில் பாஜக வியூகம் பரப்புவதில் முக்கிய பங்கு வகித்தார். 

ராணாவின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், சமூக அமைப்புகளும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Union Minister Jitendra Singh brother Devender Singh Rana dies


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->