சென்னையில் கடுமையாக மோசமடைந்த காற்றின் தரம்!...வானை வர்ணாஜாலமிட்ட ஜொலிக்க வைத்த பொதுமக்கள்! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மேலும் தீபாவளிக்கு மறுநாள் இன்றும் அரசு விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் இன்றும் சில இடங்களில் பட்டாசுகள்
வெடிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு தலைநகர் சென்னையில், நேற்று பட்டாசுகள் வெடித்து பொது மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். ஒரே நேரத்தில் அதிக அளவில் பட்டாசுகள் வெடித்ததால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் ஆர்வமுடன் பட்டாசுகளை வெடித்து வானை வர்ணாஜாலம் ஆக்கினர்.

இந்த நிலையில், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ள தகவலின்படி, சென்னையில் 4 இடங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருங்குடியில் 262, ஆலந்தூரில் 258, அரும்பாக்கத்தில் 248, வேளச்சேரியில் 224 என்ற அளவில் காற்றின் தரக் குறியீடு மோசமடைந்ததாக  தெரிவித்துள்ளது.

மேலும், கொடுங்கையூரில் 165, மணலியில் - 189, ராயபுரத்தில் 169 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு இருந்தததாக தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Air quality has worsened in chennai citizens have colored the sky


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->