கிருஷ்ணகிரியை உலுக்கிய இரட்டைக் கொலை : தீபாவளி நாளில் கொலை செய்து தப்பிய தம்பிக்கு வலைவீச்சு!
Double murder that rocked krishnagiri the brother who got away with murder on diwali day was attacked
கிருஷ்ணகிரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்த மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் மாரிமுத்து-ருக்குமணி தம்பதி. இதற்கிடையே, மாரிமுத்துவுக்கும், அவரது தம்பி முருகனுக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில், இதில் தகராறு முற்றியதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு முருகன் தனது அண்ணன் மாரிமுத்துவின் வீட்டுக்கு திடீரென சென்ற நிலையில், அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் அண்ணன் மாரிமுத்துவையும், அவரது மனைவியையும் வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளார்.
இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், காவல்துறையினருக்கு அளிக்கப்பட தகவலின் பேரில் அங்கு விரைந்த காவல்துறையினர், ரத்த வெள்ளத்தில் இருந்த மாரிமுத்து-ருக்குமணி ஆகிய இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கொலை செய்து விட்டு தப்பிய முருகனை சாம்பல்பட்டி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தீபாவளியன்று நடைபெற்ற இரட்டை கொலை சம்பவம் மோட்டூர் கிராமத்தில் பெரும் பதற்றத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Double murder that rocked krishnagiri the brother who got away with murder on diwali day was attacked