பாகிஸ்தான் எல்லை அருகே டிரோன் மற்றும் போதைப்பொருள் பறிமுதல் - Seithipunal
Seithipunal


அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லை பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு டிரோன் பறந்ததாக எல்லை பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த பகுதி வயல்வெளிகளில் தீவிர சோதனை மேற்கொண்ட எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், தனோ குர்த் கிராமம் அருகே உடைந்த நிலையில் காணப்பட்ட டிரோன் ஒன்றை பறிமுதல் செய்தனர். 

சோதனையைத் தொடர்ந்து, தானோ காலன் கிராமத்தின் அருகே சுமார் 540 கிராம் எடை கொண்ட போதைப்பொருள் பாக்கெட் ஒன்றையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 

பாகிஸ்தான் எல்லை அருகே போதைப்பொருள் கடத்தல் முயற்சிகள் அடிக்கடி நடைபெறுவதால், எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று நடத்தப்பட்ட சோதனையின் மூலம், போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Drone and drug seizure near Pakistan border


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->