20 வருட காத்திருப்பு., மேலும் ஒரு தேர்வா? வேதனையில் டிடிவி தினகரன்.! - Seithipunal
Seithipunal


உடற்கல்வி ஆசிரியர் பயிற்சி முடித்து 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிவாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு, பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்கிட வேண்டும் என்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "உடற்கல்வி ஆசிரியர் பயிற்சி முடித்து 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிவாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு பதிவு மூப்பு முன்னுரிமை (Employment Seniority ) அடிப்படையில் வேலை வழங்கிட வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன். 

அடிப்படையில் விளையாட்டு வீரர்களாக இருக்கும் அவர்களுக்கு மீண்டும் ஒரு எழுத்து தேர்வு வைப்பது பொருத்தமில்லாததாகும். 

தமிழகம் முழுவதும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிறைய காலியாக இருக்கும் நிலையில் அரசு தாமதமின்றி முடிவெடுத்து செயல்பட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்"

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் டிடிவி தினகரன் தேரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dhinakaran say about PT Teacher Job Issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->