வெற்று விளம்பரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஆக்கப்பூர்வமாக செயல்படவேண்டும் - தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


உக்ரைனில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதாக வரும் செய்திகள் பெரும் கவலையளிக்கின்றன. தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்டோரை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் காலம் தாழ்த்தாமல் மேற்கொள்ள வேண்டும்.

உக்ரைனில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதாக வரும் செய்திகள் பெரும் கவலையளிப்பதாக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "உக்ரைனில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதாக வரும் செய்திகள் பெரும் கவலையளிக்கின்றன. 

தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்டோரை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் காலம் தாழ்த்தாமல் மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அரசு இப்பிரச்னையில் கூடுதல் அக்கறைக் காட்டுவது அவசியம். மீட்கப்பட்டு தாயகம் திரும்பும் மாணவர்களுக்கு விமானநிலையத்தில் நின்றுகொண்டு தமிழக அமைச்சரும், அதிகாரிகளும் பூங்கொத்து கொடுத்து வரவேற்பதற்குப் பதிலாக டெல்லிக்குச் சென்று உக்ரைனில் சிக்கித்தவிக்கும் எஞ்சிய மாணவர்களை மீட்பதற்கான பணிகளை மத்திய அரசோடு இணைந்து மேற்கொள்வதுதான் இப்போதைய உடனடித்தேவை. 

எனவே, வெற்று விளம்பரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஆக்கப்பூர்வமாக செயல்படவேண்டும்" என்று டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran Say About Ukrain indian Student


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->