பாஜக கூட்டணியில் அமமுக இல்லை.!! இனி ஓபிஎஸ் தான்.. டிடிவி தினகரன் அதிரடி.!!
TTV dinakaran announced AMMK not in BJP alliance
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் சுவாமி தரிசனம் செய்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் ஓபிஎஸ் உடன் இணைந்து அமமுக போட்டியிடும்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் அங்கம் வைக்கவில்லை" என அறிவித்துள்ளார். ஏற்கனவே கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவதாக கூறி தமிழக அரசை கண்டித்து ஓபிஎஸ் அணியினர் தேனியில் நடத்தும் போராட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து பங்கேற்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் தேர்தலிலும் இருவரும் ஒன்றிணைந்து சந்திக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் சட்டப்போராட்டம் நடத்தி வரும் நிலையில் சசிகலா மற்றும் டி.டி.வி தினகரனுடன் இணைந்து தொண்டர்களை ஒருங்கிணைத்து அதிமுகவை மீட்டெடுப்போம் என ஓ.பி.எஸ் கூறி வருகிறார். இந்த நிலையில் நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் டிடிவி தினகரன் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது.
English Summary
TTV dinakaran announced AMMK not in BJP alliance