வரும் நாடாளுமன்ற தேர்தலை அதிமுக – அமமுக இணைந்து..., டிடிவி தினகரன் நறுக் பேட்டி.!
TTV SAY ABOUT ELECTION 2024
வரும் நாடாளுமன்ற தேர்தலை அதிமுக – அமமுக இணைந்து சந்திக்கும் என்ற யூகத்துக்கு பதில் சொல்ல முடியாது என்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இன்று திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் தெரிவிக்கையில்,
"திமுக ஆட்சிக்கு வந்ததும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால் அதைப் பற்றி இப்போது அவர் பேசுவதே இல்லை.
மீண்டும் மீண்டும் தமிழகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, விடியல் ஆட்சியில் இருந்த தமிழகம் உருவாகியுள்ளது. அம்மா கொண்டுவந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி விட்டனர். அம்மா உணவகங்களை மூடுகின்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர முடியாது என்கிறது. எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக மக்களை ஏமாற்ற பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளனர் திமுகவினர்.
வரும் நாடாளுமன்ற தேர்தலை அதிமுக – அமமுக இணைந்து சந்திக்கும் என்ற யூகத்துக்கு பதில் சொல்ல முடியாது. இப்படி நடக்கும், அப்படி நடக்கும் என அரசியலில் சொல்ல நான் ஞானியோ, ஜோதிடரோ இல்லை.
அமமுகவை வெற்றி தோல்வி எல்லாம் பாதிக்காது. எதிர்காலத்தில் தமிழக மக்கள் எங்களுக்கு வெற்றியை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது" என்று டிடிவி தினகரன் அந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
English Summary
TTV SAY ABOUT ELECTION 2024