தவெக மாநாடு பணிகள் தீவிரம் - இன்று ஆலோசனை கூட்டம்! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றி கழகத்தின்  முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் 27-ம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடத்தப்படும் என்று  நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக நாகரீகமான முறையில் வரவேண்டும் என்றும்,  குறிப்பாக மாநாட்டுக்கு பெண்களை பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும். அவர்களது பாதுகாப்பை மாவட்ட பொறுப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தொண்டர்களுக்கு தவெக கட்சி சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

மேலும், வெளி மாவட்டங்களில் இருந்து மாநாட்டுக்கு தயாராகி வருவோர் ஆங்காங்கே தங்குவதற்கு திருமண மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும், குறிப்பாக மாநாட்டுக்கு வருவோர் மது அருந்திவிட்டு வரக்கூடாது. மீறி மது அருந்தி விட்டு வருவோர் மாநாட்டு பந்தலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

இந்தநிலையில் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பாக தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று சென்னை பனையூரில் நடைபெறுகிறது.  தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், பங்கேற்று மாநாடு தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்பட்டு விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மாநாட்டில், போலீசார் விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி நடப்பது, ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து எவ்வளவு பேரை அழைத்து வர வேண்டும் என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tvk conference work intensifies consultation meeting today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->