பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் - தவெக தலைவர் விஜய் வேண்டுகோள் ..! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வரும் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

தமிழகத்தையே உலுக்கியுள்ள இந்த கள்ளச்சாராய பலி சம்பவத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் ஆறுதல் கூறி விட்டு வந்தனர்.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், " கள்ளக்குறிச்சியில் நடந்துள்ள மனதை உலுக்கும் சம்பவம் காரணமாக தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்றும், பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு பதிலாக கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று அங்கு உயிரிழந்தோர் மற்றும் சிகிச்சை பெற்று வரும் பலரது குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று தளபதி விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதன்படி தவெக நிர்வாகிகள் அனைவரும் கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று அங்கு தேவையான மருத்துவ உதவி உள்ளிட்ட அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய உதவிகளையும் செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று தனது பதிவில் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TVK Leader Vijay Requested to Not Celebrate His Birthday Tomorrow


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->