அந்த பச்சை தமிழன்... அவர் பேர கேட்டாலே கதறல் தான் - தவெக தலைவர் விஜய் உரை!
TVK Maanaadu TVK Vijay
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில், கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றியதாவது, "தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களாக 5 பேர்.
ஆம்.. பெரியார் தான் எங்கள் கொள்கை தலைவர். பெரியார் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நாங்கள் கையில் எடுக்கப் போவதே இல்லை. எங்களுக்கு அதில் உடன்பாடும் இல்லை.
யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை. அரசியலில் அண்ணன் - தம்பி உறவை அறிமுகப்படுத்திய அறிஞர் அண்ணா சொன்னது போல "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்பது தான் எங்களது நிலைப்பாடு.
ஆனாலும், பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூக சீர்திருத்தம், சமூக நீதி, பகுத்தறிவு சிந்தனை என பெரியார் சொன்னது எல்லாத்தையும் நாம் முன்னெடுக்க போகிறோம்.
அடுத்ததாக பச்சை தமிழன் பெருந்தலைவர் காமராஜர் தான். பெருந்தலைவர் காமராஜர் இந்த மண்ணில் மதச்சார்பின்மைக்கும், நேர்மையான நிர்வாக செயல்பாட்டுக்கும் முன்னோர்னமாக இருப்பதால், அவரையே எங்களுடைய வழிகாட்டியாக ஏற்கிறோம்.
இந்திய துணை கண்டத்தின் அரசியல் சாசனத்தை ஆற்றிய அண்ணல் அம்பேத்கர். இந்தியாவில் இவரின் பெயரை கேட்டாலே சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகிறவர்கள் எல்லாம் நடுங்கிப் போய் விடுவார்கள்.
வகுப்புவாத பிரதிநிதித்துவத்தையும், சாதி ஒடுக்கு முறையையும் நிறுத்த போராடிய மாபெரும் தலைவர் அவர்தான் எங்களின் வழிகாட்டி என்பதில் என்ற சொல்வதில் பெருமை கொள்கிறோம்.
பெண் தலைவர்களை கொள்கை தலைவர்களாக காட்டி, அரசியலுக்கு வருகின்ற ஒரே கட்சி நம்முடைய தமிழக வெற்றி கழகம் தான்.
அப்படி நாம் வழிகாட்டியாக ஏற்றுக் கொண்ட இரண்டு பெண் தலைவர்களில் ஒருத்தர் ஆகப்பெரும் வீராங்கனை, இந்த மண்ணை கட்டி ஆண்ட பேரரசி வேலு நாச்சியார்.
சொந்த வாழ்க்கையின் சோகத்தை மறந்து விட்டு, இந்த மண்ணுக்காக வாழ்ந்து வாளேந்தி, வேல்லேந்தி போர்க்களம் புகுந்து, ஆணை காட்டிலும் மீளமான வேகமான வேற புரட்சியாளர் தான் நம்மளுடைய வேலு நாச்சியார் இன்னொருத்தர் முன்னேற துடிக்கின்ற சமூகத்தில் பிறந்த இந்த மண்ணுக்காக இந்த மண் பின் தங்கியிடக் கூடாது என்பதற்காக இந்த முன்னேற்றத்திற்காக பாடுபட்ட அஞ்சலை அம்மாள் சொத்தை இழந்தாலும் சுயநலம் பார்க்காமல் இந்த மண்ணுக்காக இந்த சுதந்திரப் போராட்ட களத்தில் இறங்கி களம் ஆடிய புரட்சி பெண்மணிதான் நம் அஞ்சலை அம்மாள் சோ இவர்கள்தான் நம்முடைய கொள்கை தலைவர்கள் இவர்களை நாம் முழுமையாக பின்பற்றுவதுதான் நம்முடைய மதச் சார்பின்மைக்கும் சமுதாய சார்பற்ற தன்மைக்கும் சிறந்ததாக இருக்கும்" என்று தெரிவித்தார்.