பெரியார் தான் எங்கள் தலைவர், ஆனால்...! அந்த பெயிண்ட் டப்பா பிசினஸுக்கு நான் பிறகு வருகிறேன் விஜயின் மாஸ் ஸ்பீச்! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில், கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றியதாவது, "தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர் பெரியார் தான்.

என்னது பெரியார் உங்கள் கொள்கை தலைவரா? என்று ஒரு கூட்டம் அவங்களாக ஒரு முடிவுக்கு வந்து, கூச்சல் இட்டு ஒரு பெயிண்ட் டப்பாவை தூக்கிக் கொண்டு கிளம்பி விடுவார்கள் பாருங்கள். 

அந்த பெயிண்ட் டப்பா பிசினஸுக்கு நான் பிறகு வருகிறேன். ஆம்.. பெரியார் தான் எங்கள் கொள்கை தலைவர். 

ஆனால், எப்படி? ஏன்? 

பெரியார் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நாங்கள் கையில் எடுக்கப் போவதே இல்லை. எங்களுக்கு அதில் உடன்பாடும் இல்லை. 

யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை. அரசியலில் அண்ணன் - தம்பி உறவை அறிமுகப்படுத்திய அறிஞர் அண்ணா சொன்னது போல "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்பது தான் எங்களது நிலைப்பாடு. 

ஆனாலும், பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூக சீர்திருத்தம், சமூக நீதி, பகுத்தறிவு சிந்தனை என பெரியார் சொன்னது எல்லாத்தையும் நாம் முன்னெடுக்க போகிறோம்" என்று தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TVK Maanaadu Vijay Periyar leader


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->