த.வெ.க மாநாடு: இது ரீல் அல்ல, ரியல் - விஜயை எச்சரிக்கும் பாஜக!
TVK Maanadu BJP Warn
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள நிலையில், தற்போதே மாநாட்டில் கூட்டம் அலைமோதி கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், பாஜக நிர்வாகி செல்வம் வினோஜ், தமிழக வெற்றிக் கழக மாநாடு மற்றும் விஜய் ரசிகர்களை கடுமையாக விமர்சித்து உள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "முழுவதும் பக்குவமற்ற ரசிகர்களை வைத்துக் கொண்டு அரசியல் கட்சி என்ற மாபெரும் வேள்வியை நடிகர் விஜய் தொடங்கியிருக்கிறார்.
ரசிகர்கள் சிலர் கையில் அரிவாளை வைத்துக்கொண்டு மற்ற கட்சிகளுக்கு மிரட்டல் விடுக்கும் ரீல்ஸ்களை பார்க்க முடிந்தது.
த.வெ.க. மாநாட்டிற்கு புறப்பட்ட ரசிகர்கள் பலர் சென்னை உள்பட பல இடங்களில் சாலை விபத்துகளில் சிக்கி பலியாகி உள்ளனர்.
விழுப்புரத்திற்கு டிக்கெட் எடுத்து பயணித்த ரசிகர், விக்கிரவாண்டி அருகே ரயில் செல்லும் போது நேராக ரயிலில் இருந்து குதித்து மாநாட்டிற்கு செல்ல நினைத்து உயிரை இழந்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டை நடிகர் விஜய் வழங்க வேண்டும்.
விஜய்யும், அவருடைய ரசிகர்களும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது ஒன்றுதான்.
இது ரீல் அல்ல, ரியல்" என்று தெரிவித்துள்ளார்.
பாஜக நிர்வாகி செல்வம் வினோஜ் சொன்ன விமர்சனத்தில், "விக்கிரவாண்டி அருகே ரயில் செல்லும் போது நேராக ரயிலில் இருந்து குதித்து மாநாட்டிற்கு செல்ல நினைத்து உயிரை இழந்துள்ளார்" என்பது தவறானது ஆகும்.
அவர் மாநாட்டு வரவில்லை என்றும், தற்போது அவர் உயிருடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் ரயில்வே போலீசாரின் தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
இதேபோல், "ரசிகர்கள் சிலர் கையில் அரிவாளை வைத்துக்கொண்டு மற்ற கட்சிகளுக்கு மிரட்டல் விடுக்கும் ரீல்ஸ்" இது அதிமுக காலத்தில் எடுக்கப்பட்ட காணொளி என்பது குறிப்பிடத்தக்கது.