மேலும் ஒரு அதிர்ச்சி: மாநாட்டிற்குச் சென்று விபத்தில் சிக்கிய பெண் உயிரிழப்பு! அதிரவைக்கும் பலி எண்ணிக்கை! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு சென்று திரும்பிய போது ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி, லட்சுமி என்ற 65 வயது பெண் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஏற்கனவே மாநாட்டிற்கு சென்று ஆறு பேர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக, விக்கிரவாண்டி வி.சாலை நோக்கி வரும் போது, எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்துகளில், 

திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் வழக்கறிஞர் கில்லி VL.சீனிவாசன், 
திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் JK.விஜய்கலை, 
சென்னை பாரிமுனை வசந்தகுமார் மற்றும் ரியாஸ், செஞ்சி உதயகுமார், 
மற்றும் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சென்னை வில்லிவாக்கம் சார்லஸ் ஆகியோர் பலியாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TVK Maanadu one more death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->