தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு! நாளை அறிவிப்பை வெளியிடுகிறார் விஜய்! - Seithipunal
Seithipunal


விழுப்புரம், விக்கிரவாண்டி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடத்துவது தொடர்பாக, காவல்துறையிடம் அக்கட்சியினர் அனுமதி கோரி விண்ணப்பம் அளித்திருந்தனர். 

இதனை தொடர்ந்து விழுப்புரம் டிஎஸ்பி மாநாடு தொடர்பாக 21 கேள்விகளை எழுப்பி, தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். 

இந்த கடிதத்தில் மாநாட்டுக்கான ஏற்பாடு, மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? எவ்வளவு பேர் வருவார்கள்? குடிநீர், மருத்துவம், கழிப்பறை, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? 

மாநாடு முடிந்த பிறகு சேரக்கூடிய குப்பைகளை அகற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என மொத்தம் 21 கேள்விகளை விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் எழுப்பி இருந்தார். 

இந்த கேள்விகள் குறித்து தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பதில் அளிக்கப்பட்ட நிலையில், விரைவில் மனதுக்கு அனுமதி கிடைக்கும் என்று தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு வெற்றி கழகத்தின் முதல் மாநாடு குறித்து, நாளை அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக சற்று முன்பு தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TVK Vijay Maanadu announce 8 9 2024


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->