சீமானுக்கு பதிலடி: நாளை சம்பவம் உறுதி! அவசர ஆலோசனையில் இறங்கிய விஜய்!
TVK Vijay Meet with Party Mambers Seeman NTK DMK
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் நாளை காலை கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆலோசனையில் கட்சியின் உட்கட்டமைப்பு விவகாரங்கள் தொடர்பாக விஜய் ஆலோசனை நடத்துவார் எனத் தகவல் தெரிவிக்கின்றது.
நேற்று மாலை முதல் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை மற்றும் விஜய் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
மேலும், மாநாடு குறித்த திமுக, அதிமுக, பாஜக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கருத்துக்களும் இந்த ஆலோசனையில் விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது மட்டுமின்றி, வரும் டிசம்பரில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், அதுகுறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம்.
அவசர ஆலோசனைக்குப் பிறகு, சீமான் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களின் விமர்சனங்களுக்கு விஜய் தரப்பிலிருந்து பதில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயத்தில் திமுக மற்றும் பாஜகவை தவிர்த்து மற்ற கட்சிகளுடன் விவாதம் நடத்தி கொண்டிருந்தால், தேர்தல் அரசியலில் முதல் இரு இடங்களை கோட்டைவிட்டு 3, 4 இடங்களுக்கு தள்ளப்படலாம் என்பதால் சீமானுக்கு பதில் கூற வாய்ப்பில்லை என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
English Summary
TVK Vijay Meet with Party Mambers Seeman NTK DMK