பிரசாந்த் கிஷோர் - விஜய் சந்திப்பு! 2026 சம்பவம் உறுதி!
TVK Vijay Prashant Kishor
2026 சட்டசபை தேர்தலை இலக்காக நிர்ணயித்து, நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை கடந்த ஆண்டு தொடங்கி, தற்போது அதன் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
அண்மையில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்களை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை விட்டு வெளியேறிய ஆதவ் அர்ஜூனா, விஜயை நேரில் சந்தித்து தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்து கொண்டுள்ளார். அவருக்கு தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் மேலாண்மையில் அனுபவமுள்ள ஆதவ் அர்ஜூனா, பதவி ஏற்றதும்த.வெ.க. கட்சியின் தேர்தல் வியூகங்களை வடிவமைக்கும் பணியில் இறங்கியுள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்க முழு மூளையாக இருந்த, இந்தியாவின் புகழ்பெற்ற தேர்தல் வியூகம் வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் - விஜய் சந்திப்புக்கு ஆதவ் அர்ஜூனா முயற்சி செய்த நிலையில், இன்று பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் விஜயை பிரசாந்த் கிஷோர் நேரில் சந்தித்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
TVK Vijay Prashant Kishor