அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகனுக்கு சிறை? தீர்ப்பை ஏற்பதாக ஜோ பைடன் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal



அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன். இவருக்கு வயது 54. இந்நிலையில் இவர் கடந்த ஆண்டு துப்பாக்கி வாங்கிய போது கட்டாய படிவத்தில், தான் சட்ட விரோதமாக எந்த போதைப் பொருளையும் பயன்படுத்தவில்லை என்று குறிப்பிட்டு படிவத்தை ஹண்டர் பைடன் பூர்த்தி செய்துள்ளார்.

ஆனால் அவர் உண்மைக்குப் புறம்பான தவறான தகவல்களை படிவத்தில் பூர்த்தி செய்துள்ளதாக கூறி ஹண்டர் பைடன் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அவர் மீது பதியப்பட்டு உள்ள மூன்று வழக்குகளிலும் ஹண்டர் பைடன் மீது குற்றம் நிரூபணம் ஆகியுள்ளது.

இதையடுத்து ஹண்டர் பைடன் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பான தீர்ப்பு இன்னும் வழங்கப்படாத நிலையில், அடுத்து வரும் 120 நாட்களுக்குள் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த குற்றங்களுக்கு அதிகபட்சம் 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

அதே சமயம், ஹண்டர் பைடன் மீதான குற்றம் முதல் முறை நிரூபிக்கப் பட்டுள்ளதால், அவருக்கு குறைந்தபட்ச தண்டனையே வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து கூறிய அதிபர் ஜோ பைடன், "இந்த தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதேநேரம் இதுகுறித்து மேல் முறையீடு செய்ய உள்ளோம்" என்று கூறியுள்ளார். 

இந்நிலையில் இந்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

U S President Joe Biden Annouces to Accept The Verdict Against His Son


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->