"ஹிந்தி தெரியாது போடா".!! பாஜகவுக்கு உதயநிதி பதிலடி.!! - Seithipunal
Seithipunal


ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையா நடைபெற்று முடிந்த நிலையில் நேற்று பாஜகவில் அதிகாரபூர்வ சமூகவலைத்தள பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்துடன் "இந்த அநியாயக்காரர்களை அடையாளம் காணுங்கள்! அவர்கள் ராமர் கோவிலை வெறுக்கிறார்கள், சனாதன தர்மத்தை அவமதிக்கிறார்கள்" என பதிவிடப்பட்டிருந்தது. அந்த பதிவு வைரலாக நிலையில் அதற்கு உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார்.

அமைச்சர் உதயநிதி பாஜகவின் பதிவில் "இந்தி தெரியாது போடா" என ஆங்கிலத்தில் பிரிண்ட் செய்து அவர் அணிந்துள்ள டீ-சர்ட்டை போட்டுள்ள புகைப்படத்தை பதிலாக கொடுத்துள்ளார். உதயநிதியின் இந்த பதிலை திமுகவினர் கொண்டாடியும், பாஜகவினர் எதிர்த்தும் வருவதால் வைரலாகி வருகிறது.

கடந்த வாரம் 3 நாள் சுற்றுப்பயணமாக சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அமைச்சர் உதயநிதி முன்னிலையில் இந்தியில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு நாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஆங்கிலத்தில் பேசிய நரேந்திர மோடி திமுக அரசால் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது இந்தியில் மட்டுமே பேசியுள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udayanidhi response to BJP hindi theriyathu poda


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->