சதிகளை முறியடித்து சாதனை ஆட்சியை 2026லும் தொடர உறுதியேற்போம் - உதயநிதி ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


திமுக இளைஞர் அணி 44 ஆண்டுகளை நிறைவுசெய்து, 45-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், அமைச்சரும், திமுகவின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

"திமுக கழக இளைஞர் அணி 44 ஆண்டுகளை நிறைவுசெய்து, 45-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நீண்ட வரலாற்றில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டலில், இளைஞர் அணிச் செயலாளராகப் பணியாற்றும் வாய்ப்பை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்.

திமுக இளைஞரணி செயற்பாடுகளில் உற்சாகத்துடன் தங்களை அர்ப்பணித்துக்கொள்ளும் கழக இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு என் அன்பும் வாழ்த்தும்.

நாம் ஆற்றிய பணிகளும் ஏராளம், காத்திருக்கும் கடமைகளும் ஏராளம் என்பதை உணர்ந்து, 2026-இல் மீண்டும் நம் திராவிட மாடல் ஆட்சி அமைய உறுதியேற்போம்.

மூன்றாண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் மூலம் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது. ஆனால், கல்வி, தொழில்வளர்ச்சி, மருத்துவம், உள்கட்டமைப்பு ஆகியவற்றில் தமிழ்நாடு பெற்ற வளர்ச்சியைச் சீர்குலைக்க வேண்டும், மக்களைப் பிளவுபடுத்தி, மதவாத, சாதியவாத வெறியூட்டி அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்று ஒருபுறம் பாசிச சக்திகள் காத்திருக்கிறார்கள்.

இன்னொருபுறம், தி.மு.க எதிர்ப்பை மட்டுமே முதன்மை இலக்காகக் கொண்டு கழகத்தின் மீதும் திராவிட இயக்க முன்னோடிகள் மீதும் திராவிட மாடல் ஆட்சியின் மீதும், அவதூறுகளையும் பொய்ச்செய்திகளையும் பரப்புவதன் மூலம் தி.மு.கவை வீழ்த்த முடியும், என்று நினைக்கும் கயவர்களும் காத்திருக்கிறார்கள்.

நமக்கோ 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் காத்திருக்கிறது. தொடர் வெற்றிகளைக் குவித்துவரும் கழகத்தலைவர் அவர்களின் தலைமையில், 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்று, திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும். அதன்மூலம் தமிழர்கள் வளம் பெற்று தமிழ்நாடு மென்மேலும் வளர்ச்சியடைய வேண்டும். இத்தகைய மாபெரும் கடமையை நிறைவேற்றும் பெரும் பொறுப்பு கழக இளைஞர் அணிக்கு இருக்கிறது.

சதிகளை முறியடித்து சாதனை ஆட்சியை, மீண்டும் 2026-இல் அமைக்க இளைஞர் அணியின் 45-ஆம் ஆண்டு விழாவில் உறுதியேற்போம்" என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udhayanidhi stalin Youth wing DMK youth wing 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->