ஜனாதிபதியை அழைக்காமல் நடிகையை அழைப்பது தான் சனாதனம்! மீண்டும் கொளுத்தி போட்ட உதயநிதி! - Seithipunal
Seithipunal


கடந்த செப்டம்பர் 2ம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி சனாதனம் எதிர்க்க வேண்டிய விஷயம் அல்ல; டெங்கு, மலேரியா, கொசு, கொரோனா போல ஒழிக்க வேண்டிய ஒரு நோய் என பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

திமுக அமைச்சரின் இத்தகைய கருத்துக்கு இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருந்த எதிர்க்கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும் பீகார், உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த மே 28ஆம் தேதி டெல்லியில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த நிலையில் நேற்று அந்த கட்டிடத்தில் அதிகாரப்பூர்வ அலுவல் பணிகள் தொடங்கியது. புதிய நாடாளுமன்றத்தின் முதல் நாள் கூட்டத்தில் பெண்களுக்கு நாடாளுமன்றம், சட்டமன்றத் தேர்தல்களில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் பிரபல இந்தி நடிகை கங்கணா ரனாவத் கலந்து கொண்டார். புதிய நாடாளுமன்றத்தின் முதல் நாள் கூட்டத்தில் இந்தி நடிகை கலந்து கொண்டதை தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதவி ஸ்டாலின் மீண்டும் சனாதனத்துடன் தொடர்பு படுத்தி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மதுரையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் "புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு இந்தியாவின் ஜனாதிபதியான திரௌபதி முர்மு அழைக்கப்படவில்லை. ஏனென்றால் அவர் மலைவாழ் மக்கள் சமுதாயத்தை சார்ந்தவர், கணவர் இழந்தவர். அதனால் அவர் அழைக்கப்படவில்லை. ஆனால் நேற்று புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்திற்கு இந்தி நடிகை எல்லாம் அழைத்திருக்கிறார்கள். 

இதுதான் சனாதனம் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்" என புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்தி நடிகை கலந்து கொண்டதை சனாதன தர்மத்துடன் ஒப்பிட்டு பேசியது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து சனாதனம் குறித்து பேசுவது கூட்டணி கட்சிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udhayanithi once again made controversial comment on SanatanaDharma


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->