#தமிழகம் || தேர்தல் பறக்கும் படையில் பாலியல் தொல்லை.! போலீசுக்கே இந்த நிலையா? சிறையில் அடைக்கப்பட்ட பாபு.!
udhkai lady police harassment
உதகை அருகே பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த துணை வட்டாட்சியரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தேர்தல் பறக்கும் படையில் பணியில் இருந்த பெண் காவலருக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்த துணை வட்டாட்சியர் பாபு என்பவர், போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம், உதகையில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அந்த பறக்கும் படையில் பணியாற்றி வந்த பெண் காவலருக்கு, துணை வட்டாட்சியர் பாபு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண் காவலர், உடனடியாக துணை வட்டாட்சியர் பாபு மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், துணை வட்டாட்சியர் பாபு மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இன்று அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபின் சிறையில் அடைத்தனர்.
English Summary
udhkai lady police harassment