8 மாத கர்ப்பிணி மனைவியைவிட்டு., இந்தியா வரமறுத்த இந்தியர்.! உக்ரைனில் உருக்கமான சம்பவம்.! - Seithipunal
Seithipunal


8 மாத கர்ப்பிணி மனைவியை விட்டுவிட்டு என்னால் இந்தியாவுக்கு வர முடியாது என்று, உக்ரைனில் வாழும் இந்தியர் ஒருவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

உக்ரைன் நாட்டை சேர்ந்த பெண்மணியை திருமணம் செய்து கொண்ட இந்தியர் ஒருவர், தனது மனைவி 8 மாத கர்ப்பிணியாக இருப்பதால், அவரை விட்டுவிட்டு என்னால் இந்தியாவுக்கு வர முடியாது என்று தெரிவித்துள்ளார்.

போர் காரணமாக உக்கரைன் நாட்டின் தலைநகரம் கீவ் நாட்டின் அருகில் உள்ள லிவிவ் நகருக்கு இடம்பெயர்ந்துள்ள ககன் என்ற இந்தியர், உக்ரைன் நாட்டை சேர்ந்த உக்ரைன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

தற்போது அவருடைய மனைவி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். அவர் தனது மனைவியுடன் இந்தியாவுக்கு வர முயன்ற போது, அவரின் மனைவி உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் என்பதால், அவர் மனைவிக்கு இந்தியா வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியர்கள் மட்டுமே அழைத்துச் செல்ல முடியும் என்பதால், 8 மாத கர்ப்பிணியான எனது மனைவியை விட்டுவிட்டு என்னால் இந்தியாவுக்கு வர முடியாது என்று ககன் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது மனைவி மற்றும் குடும்பத்தின் பாதுகாப்பு கருதி போலந்து நாட்டிற்கு செல்ல இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ukrain indian say about his wife


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->