#BREAKING || இனி வேலைக்காகாது., சற்றுமுன் உக்ரைன் அதிபர் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தி.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் நாட்டின் இரண்டு முக்கிய பெரிய நகரங்களை ஏற்கனவே ரஷ்யா கைப்பற்றி உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் உள்ள 2 முக்கிய நகரங்களை கைப்பற்றி உள்ளோம் என்று ரஷ்யா அறிவித்துள்ள நிலையில், 

தற்போது கார்கிவ் நகரில் உச்சகட்ட போர் நடைபெற்று வருகின்றது. மேலும் உக்ரைன் நாட்டை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட வீரர்கள், தங்களுடைய ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண் அடைந்துள்ளதாகவும் ரஷ்ய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. 

அதே சமயத்தில் ரஷ்யப் படைகள் கார்கிவ் நகரை கைப்பற்றியதாக கூறப்படும் தகவலுக்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் நாடு முறையீடு செய்துள்ளது. 

ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை உடனே நிறுத்த உத்தரவிட வேண்டும் என்று, சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் நாடு அளித்துள்ள முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த வாரம் தொடங்கும் என, உக்ரைன்  அதிபர் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ukraine has appealed to the International Court of Justice


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->