ஊழல்வாதிகளின் கூட்டணி.. ஸ்டாலினுக்கு "ஒரு ஓட்டு" கூட விழாது.. மத்திய அமைச்சர் கடும் விமர்சனம்.!!
Union minister Piyush goyal criticized MKStalin
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் "ராஜஸ்தானில் அமைந்துள்ள காங்கிரஸ் அரசு அனைத்து நிலைகளிலும் தோல்வி அடைந்து விட்டது.
கடந்த நான்கரை ஆண்டுகளாக ராஜஸ்தான் வளர்ச்சி அடையவில்லை. ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் வெளிமாநிலங்களில் செல்வாக்கு கிடையாது. அவர்களுக்கு வெளிமாநிலங்களில் ஒரு ஓட்டு கூட விழாது. எதிர்க்கட்சிகளின் கூட்டணி என்பது ஊழல்வாதிகளின் கூட்டணி.
இந்திய மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து சட்டம் இயற்றுவது காலத்தின் தேவையாக அமைந்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபில் சிறுபான்மையினர் மக்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி செய்த நன்மைகளை மறந்துவிட்டார் என நினைக்கிறேன். இரு அவைகளிலும் எங்களுக்கு முழு பெரும்பான்மை உள்ளது. இருப்பினும் பல கட்சிகள் பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கும் என நினைக்கிறேன்" என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
English Summary
Union minister Piyush goyal criticized MKStalin