"முன்னாள் பிரதமரின் மகத்தான ஆளுமையை என்னால் மறுக்க முடியாது" ஒப்புக்கொண்ட ஒன்றியம் !! - Seithipunal
Seithipunal


முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தியை இந்தியாவின் தாய் என்று அழைப்பது குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி விளக்கம் அளித்துள்ளார். கேரளா மாநிலத்தை சேர்ந்த நடிகரும், அரசியல்வாதியுமான சுரேஷ் கோபி, ஒரு பிரச்சனையைப் பற்றி விவாதிக்கும் போது தான் அப்படிச் சொன்னதாகக் கூறினார். 

கேரளா மாநிலத்தின் மறைந்த மூத்த காங்கிரஸ் தலைவருமான முன்னாள் முதல்வர் கே.கருணாகரனின் மகத்தான ஆளுமை குறித்து பேசுவதாக கூறினார். மூத்த காங்கிரஸ் தலைவர் மறைந்த கருணாகரன் கேரளாவின் சிறந்த நிர்வாகியாக இருந்துள்ளார். கருணாகரனைப் பற்றிப் பேசும்போது இந்திரா காந்தியைப் பற்றி அப்படிச் சொன்னதாக மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி கூறினார்.

புதிய மோடி 3.0 அமைச்சரவையில் மாநில அமைச்சராக சேர்க்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த ஒரே பாஜக எம்பியான சுரேஷ் கோபி, கேரளப் பிரமுகர்களான CPMன் ஈ.கே.நாயனார் மற்றும் காங்கிரஸின் கே.கருணாகரன் ஆகியோரை தனது அரசியல் ஆசிரியர்கள் என்று குறிப்பிட்டார்.

முன்னாள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான மறைந்த கருணாகரன், கேரளாவின் வளர்ச்சி மற்றும் அரசியலில் மிகவும் அச்சமற்ற நிர்வாகி என மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி அவரை பற்றி புகழ்ந்தார்.

கருணாகரன் போன்ற தலைவர் கேரளாவுக்கு உண்மையான குலதெய்வம் என்று கூறினார். கேரளத்துக்காகவும், கேரள மக்களுக்காகவும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். இவர் கேரளாவில் காங்கிரஸின் தந்தை. இந்தியாவில் காங்கிரஸின் தாய் என்று இந்திரா காந்தியை எப்படி அழைக்க முடியுமோ, அதே போல கேரளாவில் கருணாகரனை காங்கிரஸின் தந்தை என்று அழைக்கலாம் என்று கோபி கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

union minister suresh gopi called indra gandhi as mother of india


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->