#BigBreaking || பட்ஜெட் - நாட்டு மக்களின் முக்கிய எதிர்பார்ப்புக்கான அந்த அறிவிப்பை வெளியிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.! - Seithipunal
Seithipunal


நாட்டு மக்களின் முக்கிய எதிர்பார்ப்பன நதிகள் இணைப்புக்கான முக்கிய அறிவிப்பை பட்ஜெட் தாக்களில் மத்திய அமைச்சர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

அவரின் அந்த பட்ஜெட் தாக்களின் அறிவிப்பில், "கங்கை- கோதாவரி, கிருஷ்ணா, காவிரி நதிகள் இணைப்பு திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதி கிடைத்தவுடன் நதிகள் இணைப்பு திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும்" என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

மேலும் பட்ஜெட் அறிவிப்பில், 

நாட்டின் பொருளாதாரம் மீட்சிப் பாதையில் பயணிக்கிறது. அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. வெளிப்படைத் தன்மையுடன் நிதிநிலை அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பொருளாதாரத்தை வளப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாம் கொரோனா காலக்கட்டத்தில் வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறோம்; தொலைநோக்கு திட்டங்களுடன் நாம் பயணித்து வருகிறோம்.

5 ஆண்டுகளில் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு. ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் முழுமையாக தனியாருக்கு பரிமாற்றம் செய்யப் பட்டுள்ளது.

ஏழைகள் நடுத்தர மக்களின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. ஏழை மக்களுக்கு எரிவாயு வசதி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.


400 புதிய வந்தே பாரத் ரயில்கள் அடுத்த 3 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும். நடப்பு நிதியாண்டில் 25,000 கி.மீ அளவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் விரிவுப்படுத்தப்படும். மலைப் பகுதிகளில் போக்குவரத்து மற்றும் தொடர்பு வசதியை மேம்படுத்த தனியார் பங்களிப்புடன் திட்டம். அவசரகால கடனுதவி திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிப்பு.

வேளாண் ஏற்றுமதிக்கு ரயில்வே துறையை திறம்பட செயல்படுத்த நடவடிக்கை. ட்ரோன்கள் மூலம் பயிர்களை ஆய்வு செய்ய திட்டம். நாடு முழுவதும் ரசாயனம் இல்லா இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும்

அவசரகால கடனுதவி திட்டம் மூலம் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் நிதியுதவி வழங்கப்படும்" என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UnionBudget2022


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->