#Budget2022 || பெண்களுக்கென 3 புதிய திட்டங்கள் - பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


மகளிர்க்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 3 புதிய திட்டங்களை இந்த பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவித்துள்ளார்.

அதன்படி சகி இயக்கம், வாத்சல்யா இயக்கம், ஊட்டச்சத்து 2.0 இயக்கம் ஆகியவை பெண்களுக்காக 3 இயக்கங்கள் தொடங்கப்பட உள்ளது என்று, மத்திய நிதியமைச்சர் சீதாராமன் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மேலும் பட்ஜெட் அறிவிப்பில், 

இந்தியாவுக்கென பிரத்யேக கிரிப்டோ கரன்சி உருவாக்கப்படும். இந்த ஆண்டே ரிசர்வ் வங்கி மூலம் டிஜிட்டல் பணம் அறிமுகப்படுத்தப்படும். டிஜிட்டல் பணத்திற்கு என்று புதிய மத்திய வங்கி ஏற்படுத்தப்படும். 25 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி மையங்கள் அமைக்கப்படும். கிரிப்டோ கரன்சி மூலம் ஈட்டப்படும் வருவாய் மீது 30% வரி விதிப்பு செய்யப்படும்.

விவசாயிகளுக்கு முக்கியமான ஒரு அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவித்துள்ளார். அதன்படி 2022 -2023ம் நிதி ஆண்டில் விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை வழங்க 2.7 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டும்.

கங்கை- கோதாவரி, கிருஷ்ணா, காவிரி நதிகள் இணைப்பு திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதி கிடைத்தவுடன் நதிகள் இணைப்பு திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும்.

ஸ்டார்ட் அப் தொழில்முனைவோருக்கு வழங்கப்படும் வரி விலக்கு மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு.  கூட்டுறவு சங்கங்களுக்கான கூடுதல் கட்டணம் 12 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைக்கப்படும். பாதுகாப்பு துறைக்கு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் 68% வாங்கப்படும்.

திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்வோருக்கு 2 ஆண்டுகள் அவகாசம். கூடுதல் வருமானத்தை கணக்கில் காட்டி கூடுதல் வரி செலுத்த விரும்புவோருக்கு திருத்தப்பட்ட கணக்கு தாக்கல் வசதி செய்யப்படும்.

மாநில அரசுகளுக்கு உதவ ரூ.1,00,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 2022-23ல் நிதி பற்றாக்குறை 6.8%ஆக இருக்கும். 5 ஆண்டுகளில் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு. ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் முழுமையாக தனியாருக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஏழைகள் நடுத்தர மக்களின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. ஏழை மக்களுக்கு எரிவாயு வசதி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவசரகால கடனுதவி திட்டம் மூலம் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் நிதியுதவி வழங்கப்படும்.

நாட்டின் பொருளாதாரம் மீட்சிப் பாதையில் பயணிக்கிறது. அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. வெளிப்படைத் தன்மையுடன் நிதிநிலை அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பொருளாதாரத்தை வளப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாம் கொரோனா காலக்கட்டத்தில் வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறோம்; தொலைநோக்கு திட்டங்களுடன் நாம் பயணித்து வருகிறோம்.

400 புதிய வந்தே பாரத் ரயில்கள் அடுத்த 3 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும். நடப்பு நிதியாண்டில் 25,000 கி.மீ அளவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் விரிவுப்படுத்தப்படும். மலைப் பகுதிகளில் போக்குவரத்து மற்றும் தொடர்பு வசதியை மேம்படுத்த தனியார் பங்களிப்புடன் திட்டம் செயல்படுத்தப்படும். அவசரகால கடனுதவி திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

வேளாண் ஏற்றுமதிக்கு ரயில்வே துறையை திறம்பட செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ட்ரோன்கள் மூலம் பயிர்களை ஆய்வு செய்ய திட்டம் செயல்படுத்தப்படும். நாடு முழுவதும் ரசாயனம் இல்லா இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும்" என்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UnionBudget2022 Women 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->