நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்..மநீம கட்சிக்கு டார்ச் லைட் சின்னம்-மாநில தேர்தல் ஆணையம்.!
Urban local election MNM logo torch light
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களுக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வருகின்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 19-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. வரும் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடை பெறுகிறது.
தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, வேட்பாளர் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளில் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு "டார்ச் லைட்" சின்னத்தை ஒதுக்கி மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
English Summary
Urban local election MNM logo torch light