உதயநிதி மாமன்னன் படத்தில் நடித்தால் மட்டும் போதுமா?.. அன்புமணி ஆவேச பேச்சு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவிற்கு 10 தொகுதியில் ஒதுக்கப்பட்ட உள்ளது. விழுப்புரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் முரளி சங்கரை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

அன்புமணி பேசியதாவது, தர்மபுரி பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி எனது தந்தை முதலமைச்சர். வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடுகாக சட்ட போராட்டம் நடத்தி வருகிறார் என்று கூறினார். விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டு ஆகவே உள்ளார். ஆட்சியை கையில் வைத்துக் கொண்டு நீங்கள் எதற்கு சட்டப் போராட்டம் நடத்த வேண்டும். என்னிடம் ஆட்சி இருந்தால் ஒரே மணி நேரத்தில் இட ஒதுக்கிடை கொண்டு வருவேன் என்று பேசினார். தொடர்ந்து பேசுகையில், இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் தரவுகளை எடுத்துகொண்டிருகிறார்கள். உதயநிதி மாமன்னன் படத்தில் நடித்தால் மட்டும் போதாது, பட்டியலிண மக்களுக்கு மரியாதை குடுக்கவேண்டாமா, இது சினிமா இல்லை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதிகமாக செய்தது பாமகதான் என்று பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uthayanithi mamannan movie act waste anbumani speech


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->